Friday, August 7, 2009

ஏக்கம்

தட்டித் தூங்க வைக்கத்
தாய்மடி இருந்தும்
நினைவுகளில் ஏக்கத்தைத்
ததும்ப விடும் தத்துப்பிள்ளை நான்!
தாலாட்டு பாடிய
வாய் கூட ஓயவில்லை
அன்னை மொழி கேட்க முடியா
அந்நியன் ஆகி விட்டேன்!
அரும்பிய மீசைப் பருவத்திலும்
ஆசையாய் என் தோள்மீது
கைபோடும் தந்தை
அடிக்கடி ஏமாந்து போகிறாராம்!
சண்டையிட்ட தலையணைகள்
இன்று தூக்கமில்லா இரவுகளில்
பேச்சுத் துணையாய்!!!

2 comments:

  1. இதற்குத் தான் கல்யாணம் பண்ணிக்கங்க

    ReplyDelete
  2. இதற்குத் தான் கல்யாணம் பண்ணிக்கங்க

    ReplyDelete

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!